புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

ரம்பமானது ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கையை மறந்த அல் ஹசேன்...?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
செயிட்ராட் அல் ஹுசேன் தொடக்கவுரை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது, அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துள்ளார்.
அவர் தனது உரையில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகள்  தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கை தொடர்பாக எதையும் சுட்டிக்காட்டவில்லை.
அவர் இன்றைய உரையில், தனது இலங்கைப் பயணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதுதொடர்பாக மௌனம் காத்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், இலங்கை குறித்த விவாதங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad