புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற வாகன பதிவு மோசடி!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகளில் வாகன இறக்குமதியின் போது நடந்துள்ள பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட போதே இந்த மோசடி நடந்துள்ளது.

சுங்க திணைக்களத்தின் பதிவேடுகளில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய 4 ஆயிரத்து 63 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதே இதில் பாரதூரமான நிலைமையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவான பெறுமதியான வாகனங்கள்,குறைந்த பெறுமதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 746 வாகனங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

27 முறை இவ்வாறு மோசடியான முறையில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதனால், அரசு ஏற்பட்ட இழப்பு இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

ad

ad