புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

மஹிந்த - பசில் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் சமல்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு
எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சமல் ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவினால் வேறு கட்சி ஒன்றை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டம் தொடர்பில் தனது கருத்தினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க மற்றும் தனது தந்தையான டீ.ஏ.ராஜபக்ச இணைந்து -ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கியதாகவும் அதனை பிளவுபடுத்துவதற்கு தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கியப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயார் எனவும், தனது குடும்பத்தின் அழுத்தங்களினால் நிராகரித்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்றுகொள்வதற்கும் தான் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்சியை மீண்டும் சீரமைக்க வேண்டும் எனவும் அனைத்து தொகுதி அமைப்பாளர்களையும் அழைத்து ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என சமல் ராஜபக்ச நிறைவேற்று குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அமைப்பாளர்களிடம் காணப்படுகின்ற அறியாமை காரணமாக வேறு குழுக்கள் கட்சி உறுப்பினர்களை பிழையான வழியில் அனுப்பி வைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று ராஜபக்சர்களின் புதிய கட்சி தலைமையகம் திறந்து வைக்கும் நிகழ்வினையும் சமல் ராஜபக்ச புறக்கனித்துள்ளனர்.
சமல் ராஜபக்சவின் மகனாக ஷசிந்திர ராஜபக்சவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஷசிந்திர ராஜபக்ச கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்காக முன் நின்று மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் நாடாளுமன்ற நடவடிக்கை செயலாளர் குமாரசிறி ஹெட்டியுடம் மோதலிலும் ஈடுபட்டுள்ளார்.
கடுமையான மஹிந்த ஆதரவாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட காலி மாவட்ட உறுப்பினராக கீதா குமாரசிங்கவும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். அதற்கமைய காலி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்று கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்

ad

ad