புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்: அதிரடியாக கைது செய்த கனேடிய பொலிசார்

கனடா நாட்டில் பொதுமக்கள் வீடுகளை சொந்தமாக வாங்குவதற்கு அதிக வட்டியுடன் கடன் வழங்கிய பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடந்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறோன்ரொ நகரை சேர்ந்த ஜயவதி(ஜானகி)உக்வாடேகே பெரிரா(51) என்ற பெண் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இதே சமயம், வீடுகளை சொந்தமாக விலைக்கு வாங்கி அதன் சந்தை மதிப்பு அதிகமாகும்போது கூடுதலான விலைக்கு மற்றவர்களிடம் விற்பனை செய்து வருவது அந்நகரில் பிரபல தொழிலாக இருந்து வருகிறது.
இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், தன்னிடம் குறுகிய கால முதலீடு செய்து அதிக வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், மற்ற நபர்களை தன்னிடம் சிபாரிசு செய்தால், அந்த நபர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்பதால், Muskoka பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பெண்ணிடம் முதலீடு செய்து வந்துள்ளனர்.
இந்த பண பரிவர்த்தனைகள் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்துள்ளது.
ஆனால், ஒரு நிலையில் வாடிக்கையாளர்களால் முதலீடு செய்ய இயலாதபோது, அவர்கள் செலுத்திய ரொக்க தொகையை அந்த பெண் திருப்பி செலுத்த தவறியுள்ளதாக புகார்கள் எழுந்தது.
இவற்றில் ஒரு புகாராக வாடிக்கையாளர்களிடம் சுமார் 5,000 டொலர் வரை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
புகாரை பெற்ற பொலிசார், மோசடியில் ஈடுப்பட்டு வந்த பெண்ணை கடந்த வியாழக்கிழமை அன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
எனினும், பெண்ணிடம் மோசடியில் சிக்கிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு மோசடிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் விசாரணை அதிகாரியான ரூத் மோரன் என்பவரை 416-808-7319 என்ற தொலைப்பேசி எண்ணில் அல்லது ruth.moran@torontopolice.on.ca என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ad

ad