புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம்

மிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல் வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும்
வேலையை முதலில் தொடங்கி வைத்தது திமுகதான்.  அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் முதல்வர் ஜெயலலிலதாவை கிண்டலடித்து 'என்னம்மா இப்படி பண்றீங்களேமா?' என்ற வார்த்தையை பயன்படுத்தி திமுக நேற்று ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதற்கே  ஒரே நாளில் திமுகவை வறுத்தெடுக்கும் வகையில் நெட்டிசன்கள் திமுகவை கிண்டலடித்து விதம் விதமாக மீம்ஸ்களை தெறிக்க விட்டு விட்டனர்.

அதற்கெல்லாம் அசராத திமுக இன்றும் அனைத்து பத்திரிகைகளிலும் மீண்டும் அதே போன்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.  பத்திரிகை இன்டஸ்ட்ரியில்  ஒரு நாள் விளம்பரத்துக்கே 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரு நாட்கள் விளம்பர கணக்கையும் சேர்த்தால்  ரூ.40 கோடிக்கும் மேல் செலவாகியிருக்கும்  எனவும் கூறப்படுகிறது. இந்த தேர்தலை பொறுத்த வரை, திமுக எப்பாடு பட்டாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இப்போதே பணத்தை வாரி இறைக்கத் தொடங்கியிருக்கிறதாம்.வழக்கமாக திமுக அதிமுகவினர்' நாங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் 'என்று கூறி விளம்பரம் செய்வார்கள். இப்போது முதன் முறையாக ஒருவரை ஒருவர் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையை கச்சிதமாக செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. 

இந்த விளம்பரங்களுக்கு பின்னால் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருப்பதாக சொல்லப்படுகிறது. தாத்தாவை முதல்வராக்குவதை விட மாமனாரை முதல்வராக்கி விட அழகு பார்க்க வேண்டுமென்ற உத்வேகத்தில் அவர் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். அவரது ஆலோசனையிலும் அறிவுரையின் பேரிலும்தான் இது போன்ற கிரியேட்டிவிட்டியாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறதாம். இனியும் வெளியிடப்படுமாம். 

ஆனால் திமுக அளித்த இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை. பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த விளம்பரங்களுக்கு ஒரே நாளில் அதிமுக ஐ.டி. விங் பலமடங்கு பதிலடி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. கருணாநிதி, ஸடாலின், அழகிரி, கனிமொழி, ராசாத்தி அம்மாள் மொத்தத்தில் பெரிய குடும்பத்தில் உள்ள அள்ளு சில்லுகளையெல்லாம் கூட விட்டு வைக்காமல் மீம்ஸ்களை அதிமுக ஐ.டி விங் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறது. இன்று வரை அந்த மீம்ஸ்கள் அடங்கவில்லை. தொடர்ந்து பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. 

சொல்லப் போனால், திமுக கொடுத்த விளம்பரம் அவர்களுக்கே வினையாகிப் போனது என்றே சொல்ல வேண்டும். திமுகவினருக்கு அதிமுகவின் ஐ.டி. விங் மட்டும் பதிலடி கொடுக்கவில்லை.  திமுக மீது கடும் கோபத்துடன் உள்ள நெட்டிசன்களும் அங்க பாத்துருக்கிறீங்களா? இங்க பாத்துருக்கிறீங்காள?னு மீம்ஸ்களை தட்டி எறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.5 வருஷத்துல பாத்திருக்கீங்களா? விளம்பரத்துக்கு பறந்த மீம்ஸ்கள் தொகுப்பை காண க்ளிக் செய்க...



கடந்த மழை வெள்ளத்தின் போது திமுக ஒரு கோடி நிதியளித்தது. தற்போது பத்திரிகை விளம்பரத்துக்காகவே ரூ. 40 கோடி ரூபாய் வரை செலவழித்தால் அந்த கட்சியிடம் எவ்வளவு பணம் கொட்டி கிடக்கும். அத்தனையும் தமிழக மக்களை சுரண்டி சம்பாதித்த பணம் என்று தேர்தல் நேரத்தில் அதிமுக பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாம். 

இப்படி விளம்பரம் கொடுக்கும் கட்சியின் தலைவர்தான் இன்னும் கொஞ்சம் நாளில் ‘‘உடன் பிறப்பே தேர்தல் நிதி கொண்டு வா... மாலையாக வராதே பணமாக வா..‘‘ என்றெல்லாம்கூடிய விரைவில் கடிதம் எழுதுவார் என்று அதிமுகவினர் கிண்டலடிப்பதோடு,  பல கோடி கொட்டிக் கொடுத்து திட்டு வாங்கிய ஒரே கட்சி திமுகதான் என்றும் சிரியாய் சிரிக்கின்றனர். 
 

ad

ad