புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான


மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்
மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிணறு இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆயத்த நிலை தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜரான மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடையாளம் காணப்பட்ட குறித்த கிணற்றைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் குறித்த கிணற்றை தோண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த கிணற்றை வரட்சியான காலப்பகுதியில் தோண்டும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் தோண்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விசாரணைகளின் போது, காணாமல் போனவர்கள் சர்பாக கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளான ஜீ.ராஜ குலேந்திரம், வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன், பிரிமூஸ் சிஙாய்வா, லோகு ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, மன்னார் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நில அளவை திணைக்கள அதிகாரிகள், கிராம அலுவலகர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி காணப்பட்ட இடத்திற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட கிணற்றை இன்று மதியம் 1 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad