புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2016

பிளவடையும் நிலையில் சுதந்திர கட்சி! பசில், நாமலை தூண்களாக நிறுத்த திட்டம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதனை தடுப்பதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு சுதந்திர கட்சியில், இரண்டு முக்கிய பதவிகள் வழங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பான தகவலகள்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் கசிந்துள்ளது.
ராஜபக்ச ஆட்சியின் போது வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக செயற்பட்ட சரித்த ஹேரதின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, அவரின் வீட்டிற்கு வருகை தந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு தரப்பு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அன்றைய தினம் குறித்த இரு தரப்பு பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியின் பிரச்சினைகளை சரி செய்து கொள்வதற்காக அந்த வீட்டில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய நாமல் ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக கலந்துரையாடப்பட்டுள்ளது. துமிந்த திஸாநாயக்க அதன் பிரதான செயலாளராக இருப்பது தொடர்பில் மஹிந்த தரப்பினர் எதிர்ப்பு வெளியிடவில்லை. அத்துடன் இந்த யோசனை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச தங்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
எனினும் கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு மைத்திரி தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்ட போது மஹிந்த ராஜபக்ச அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா சுநத்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் செயலாளர் பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது கடந்த சில நாட்களுக்குள் கூட்டு எதிர்க்கட்சியின் யோசனையாக மைத்திரி தரப்பினர் முன்வைத்தனர். இதன் ஊடாக இரு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை தோல்வியடைய செய்வதற்கென்றால் இரு தரப்பினதும் அர்ப்பணிப்பு அவசியம் என்பது கூட்டு எதிர்கட்சி பிரதானிகளின் கருத்தாக உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதனை தடுத்து ஐக்கிய தேசிய கட்சியை தோல்வியடைய செய்வதே அவர்களின் அவசியமாக உள்ளது.
இதேவேளை பசில் ராஜபக்சவுக்கு கிடைக்கவுள்ள பதவி தொடர்பில் இன்னமும் உறுதியான இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியிருப்பினும் பசில் ராஜபக்ச தான் எதிர்பார்க்கும் பதவி தொடர்பில் இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பாரிய நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பதவிகளை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதன் ஊடாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பதற்கு அவதானம் செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த இரண்டு பெயர்களும் விசாரணை நடவடிக்கைகளை மூடிமறைக்கும் நோக்கிலே முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad