புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2016

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை


மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என  அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா சிவராத்திரி நடைபெறாது என வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அதில் உண்மையில்லை எனவும் குறித்த   கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இம் முறை வழமைபோலவே மகா சிவராத்திரி நடைபெறும் என தெரிவிக்கபட்டது.
எவ்வாறிருப்பினும் இம்முறை ஆலய வசந்த மண்டபத்தில் தேவாரம் ஓதுதல் சொற்பொழிவு மற்றும் பஐணை முதலான நிகழ்வுகள் மட்டுமே நடத்துவதெனவும் நடன நிகழ்வுகள் நடத்தப்படாமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே கடந்த வருடம்போல் 90 அரச மற்றும் தனியார் பேருந்துக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தபடவுள்ளது. இதேவேளை புகையிரத சேவையூடாக வரும்  பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படவுள்ளது.
மின்சாரத்திற்கென 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கம்பங்கள் அமைக்கப்டும் இடங்கள் அடையாளப்படுத்திய பின் மின் குமிழ்கள் பொருத்தப்படவுள்ளது.
இது தவிர வீதிகள், சுகாதாரம், குடிநீர், உணவு, பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் மன்னார் மாவட்ட உதவி செயலாளர் வீ.பாகரன் திருக்கேதீஸ்வர கோவில் இணைச்செயலாளர் புலவர் அ.திருநாவக்கரசு இணைப்பொருளாரர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் இணை உப தலைவர் வைத்தியகலாநிதி எஸ்.கதிர்காமநாதன் அறங்காவல் சபை தலைவர் சு.பிரிந்தாவணன் உட்பட திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

ad

ad