புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2016

மஹிந்தவுக்கும் இந்த நிலைமையா?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு
எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 30 நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழுவினர் விசாரணைகளை நடாத்த தீர்மானித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கட்சியில் எவ்வாறான பதவி வகித்தாலும் ஒழுக்க விதிகளை மீறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது. உள்ளக ஒழுக்கம் அரசியல் கட்சியொன்றுக்கு மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. கட்சியின் ஒழுக்க விதிகளை நிலைநாட்டுவதே தமது பிரதான இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சிக்கும் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் எதிராக விமர்சனம் செய்து வரும அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad