புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம்

அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த 4076 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிபர் நியமனங்களுக்கான கடிதங்களை மார்ச் மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2005 ஆம் ஆண்டிலேயே அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கான போட்டிப் பரீட்சை இறுதியாக நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படையிலேயே அதிபர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிரப்பப்ட்டு வந்துள்ளன.

இதன் பிரகாரம் 5,600 பதவி வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சுமார் 19,000 பேர் தோற்றியிருந்ததுடன், அவர்களில் சித்தியடைந்த 4076 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. நியமனம் வழங்கப்படவுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக இரண்டு வாரகால பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ad

ad