புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பீபா) புதிய தலைவராக கெய்னி இன்பென்டினோ

fifaprasidentuefa-generalsekretar-infantinokandidiert-umblatternachfolge-small
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பீபா) புதிய தலைவராக கெய்னி இன்பென்டினோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற
சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் தலைவருக்கான தேர்தலில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாக செப்பிளாட்டர் தெரிவு செய்யப்பட்டார்.
பிளாட்டர் பொறுப் பேற்ற சில நாள்களில், கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடர்களை நடத் தும் உரிமத்தை வழங்குவதிலும், ஆட்டங்களுக்கான ஒளிபரப்பு உரிமங்களை வழங்குவதிலும், ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இருந்த கொடுக்கல் வாங்கல்களிலும் அவர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து பிளாட்டர் தனது பதவியிலிருந்து விலகினார். பிளாட்டரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 6 வருடங்கள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய தலை வருக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் சுவிற்சர்லாந்தின் தலைநகரான சூரிச்சில் இடம்பெற்றது. இதில் புதிய தலைவராக கெய்னி இன்பென்டினோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு டுபாய் இளவரசர் அலிபின் அல் ஹூசன், ஜேரோம் சாம்பெக்னே, கெய்னி இன்பென்டினோ, இப்ராகிம் அல் கலிபா, டோக்கியோ செக்ஸ்வாலே ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.
இந்த ஐந்து நபர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேட்பாளரான இப்ராகிம் அல் கலிபாவுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப்பட்டன.
சர்வதேச கால்பந்து சமமேளனத்தின் நிர்வாக முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகத் தெரிவித்து அவர் முன்வைத்த திட்டங்களே அவர் மீதான அதிக எதிர்பார்ப்புக்களுக்கு காரணமாக அமைந்தன. ஆனால் எதிர்பார்ப்புக்களைப் பொய்ப்பித்து வெற்றிபெற்றுள்ளார் கெய்னி இன்பென் டினோ

ad

ad