புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

1 கோடி பேர் யார் பக்கம்?

ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக்
குறிவைத்து தி.மு.க., அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் களம் இறங்கியிருக்கின்றன. இவர்களில், புதிய வாக்காளர்களின் மனங்களை வெல்லப்போவது யார்? கடந்தகாலத் தேர்தல் வரலாற்றில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது வென்றது யார்? எண்களில் இருந்து உண்மைகளைத் தேடலாம்...
தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

தி.மு.க Vs. அ.தி.மு.க ஹைலைட்ஸ்

1996-க்குப் பிறகு 

தி.மு.க-வின் வாக்குவங்கி 

    
1996    -    42.07 % 
2001    -    30.92 %
2006    -    26.46 %
2011    -    22.39 % 

அ.தி.மு.க-வின் வாக்குவங்கி

1996    -    21.47 % 
2001    -    31.44 %
2006    -    32.64 %
2011    -    38.40 % 

புதிய வாக்காளர்கள் 

1977-க்குப் பிறகான தேர்தல்களில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஆறு முறை அ.தி.மு.க-வும், இரண்டு முறை தி.மு.க-வும் வெற்றிபெற்றுள்ளன. வாக்காளர் எண்ணிக்கை குறைந்த 2006-ம் ஆண்டு தேர்தலிலும் தி.மு.க-வே வெற்றிபெற்றது. 

அ.தி.மு.க வெற்றிபெற்ற தேர்தல்கள்: 

ஆண்டு - புதிய வாக்காளர்கள் சதவிகிதம்

1977     -    22.57 %
1980    -    3.68%
1984    -    5.99%
1991    -    13.07 %
2001    -    11.77 %
2011    -    1.10%

தி.மு.க வெற்றிபெற்ற தேர்தல்கள் 

ஆண்டு - புதிய வாக்காளர்கள் சதவிகிதம்

1989    -    14.04 %
1996    -    6.44%
2006    -    (-1.84%)

நடைபெற உள்ள 2016-ம் ஆண்டு தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 1,07,99,636 பேர் - 22.92%. 

கட்சிகளின் இந்த வாக்கு சதவிகிதம், வெற்றி இவற்றுக்குப் பின்னால் கூட்டணி பலம், அந்தந்த நேரத்து அரசியல் சூழல், அனுதாப அலை எனப் பல காரணிகள் இருக்கின்றன. புதிய வாக்காளர்களை மனதில்கொண்டு அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு கணக்குப் போடுகின்றன. வாக்காளர்களின் மனதில் உள்ள கணக்கின் விடை அவர்களுக்கு மட்டுமே தெரியும்!

ad

ad