புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2016

சுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்: தேமுதிகவின் 4 அதிரடி அஸ்திரங்கள்!

'அண்ணன் எங்கயும் வர்றதாயில்லை... இனி அண்ணிதான் எல்லாமே' என்கிற குரல் தேமுதிக ஏரியாவிலிருந்து கேட்கத் தொடங்கியிருக்கிறது 

ஏற்கனவே, ' தருமர் அருகில் நெருங்க ஒருவரையும்
அனுமதிக்க மாட்டோம்' என்று வைகோ தெரிவித்திருக்கும் வேளையில்,  'இனி எல்லாமே அண்ணிதான்' என்ற குரல் கோயம்பேட்டிலிருந்து  ஸ்ட்ராங்காகவே கேட்கிறது.

'எப்பவுமே இப்படித்தானா, இல்லே இப்படித்தான் எப்பவுமேவா ?' என்ற கேள்வியுடன் தேமுதிக ஏரியாவில் சுற்றிவந்தோம்.
அரசியல் பயணத்தின் அடுத்தக்கட்டமாக, தேமுதிக 4 அதிரடி அஸ்திரங்களை கையில் எடுத்திருக்கிறது என்கிறது விஜயகாந்தின் நெருங்கிய வட்டாரம். அது என்னென்னவென்று ஆச்சர்யமாக கேட்டோம்.
அவர்கள் அள்ளித்தெளித்த தகவல்கள் இங்கே...


அண்ணியும், அண்ணனுமே போட்டி !


பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலை வந்து விட்டதால், எங்கள் சின்ன தலைவர் சுதீஷ், இந்த சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பு அதிகம். அண்ணியும், அண்ணனும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பல புரட்சிகளை செய்த எம்ஜிஆர் போல் ஒரு புரட்சியாளர் என்றால் அது எங்கள் கேப்டன்தான். கணவன் -மனைவி இருவரும் சேர்ந்து இதுவரையில் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது இல்லை. அதையும் எங்கள் கேப்டன் குடும்பம்தான்  செய்திருக்கிறது.

சுழற்சி முறையில் துணை முதல்வர்கள் ? 


வெற்றி பெற்றதும், அண்ணன் முதலமைச்சர், அண்ணியார் துணை முதல்வர். கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சியும் மந்திரி சபையில் இடம் பிடிக்கும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை துணை முதல்வரை அண்ணன் (விஜயகாந்துதாங்க) மாற்றுவார். அது சுழற்சி முறையில் கடை பிடிக்கப்படுவதால் அண்ணனுடன் சேர்ந்திருக்கும் நான்கு  கட்சியில் உள்ளவர்களுமே துணை முதல்வர்களாகி விடுவார்கள்.
மீடியாவை சமாளிக்க வைகோ

எங்கள் எல்லோருடைய கருத்தையும் அண்ணன் கேட்கிறார்.  நாங்கள் மறுக்கும் கருத்தை அவர் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார். பத்திரிகைகள்தான் தப்புத் தப்பாக பேசியும் எழுதியும் கேப்டனின் மரியாதையைக் கெடுத்து வருகின்றன. அதனால்தான் அண்ணன், ' நான் வெளியே வந்து நின்னாலே சொல்லி வைத்தது போல் ஏதாவது  வம்பாக கேள்வி கேட்டு சூடாக்கிடறாங்க. என்னை அவங்ககிட்டே இருந்து பத்திரமாக பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு'ன்னு வைகோ அண்ணன் கிட்டே கேட்டுக்கிட்டாரு.
அதனாலதான் வைகோ அண்ணனே வெளியே வந்து பத்திரிகைக்காரங்ககிட்டே,   'நாங்களே சொல்லி அனுப்பறோம்.... அப்ப வாங்க' ன்னு சொன்னதும் கூட. இதையே கேப்டன் சொல்லியிருந்தா  அந்த இடத்துல பெரிய பஞ்சாயத்து ஆகியிருக்கும்.

வேட்பாளர் சீண்டினால் அடிப்பார் ?


தேர்தல் பிரச்சாரங்களின் போது நம்ம வேட்பாளர்களும் உங்க பத்திரிகைக்காரங்க மாதிரிதான். சும்மாவே இருக்கறது கிடையாது.  பிரச்சார வேன்ல ஒரு வேட்பாளரை அடிச்சதைப் போட்டுப் போட்டுக் காட்டுனீங்களே அன்னைக்கு உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு யாராவது கேப்டன் கிட்டே போயி கேட்டீங்களா? அந்த வேட்பாளர் வேனுக்குள்ளே சும்மா கிடக்காம, ' கேப்டன் இந்தப் பக்கம் பாருங்க,  எவ்வளவு பேரு நிக்கறாங்க, இதோ அந்தப் பக்கம் பாருங்க, தோ இந்தப் பக்கம்தான் நீங்க பாக்கவேயில்லை' ன்னு மாத்தி மாத்தி டைரக்‌ஷனைக் கொடுத்தா யாருங்க சும்மா இருப்பாங்க?
பொதுக்கூட்டத்தில் மட்டுமே பேசுவார்

பல நேரங்கள்ல இதாங்க நடக்குது. கேப்டன் ஜாலியான குணம் உள்ளவருங்க. அவரை மடக்கி வெச்சு எதையாவது சொல்லி சொல்லி சீண்டும்போதுதான் இப்படிப் பிரச்னை ஆகிடுது. அதனாலதான் இந்த முறை பிரச்சார வேனில் எல்லா இடத்துக்கும் அண்ணி வர்றாங்க. அண்ணனுக்குன்னு  முக்கியமான இடங்களில் பொதுக் கூட்டத்துல மட்டும் பேசற மாதிரி ஏற்பாடுகளை செய்திருக்கோம்... " என்றனர்.

இந்த முறை வேட்பாளர்களை பிரச்சார வேனில் வைத்தே  அடித்தார்  என்ற  குற்றச்சாட்டு வர வாய்ப்பே இல்லை.

ad

ad