புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2016

பிரஸ்சல்ஸ் தாக்குதல் தொடர்பாக 6 பேர் அதிரடி கைது: தொடரும் பொலிசார் வேட்டை - புருஸ்ஸெல்ஸ் நாயகன் யூலா


பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக 6 சந்தேகத்திற்குரிய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர்.
இந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதுடன், 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் தப்பி தலைமறைவாக இருப்பதாக பிரஸ்சல்ஸ் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து நேற்று மாலை நேரத்தில் Schaerbeek நகரில் உள்ள ஒவ்வொரு வீடாக பொலிசார் அதிரடி சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையின் முடிவில் தாக்குதலில் ஈடுப்பட்டதாக சந்தேகப்படும் 6 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதே சமயம், பிரான்ஸ் தலைநகரான பாரீஸிலும் தாக்குதலை நடத்த திட்டமிட்ட நபர் ஒருவரையும் அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் 6 பேரையும் கைது செய்திருந்தாலும், அவர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களை பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
புருஸ்ஸெல்ஸ் நாயகன் அல்ஃபோன்ஸ் யூலா!
புருஸ்ஸெல்ஸ் விமான நிலையத்தில், கடந்த செவ்வாய் அன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல உயிர்களை பலி வாங்கியது. அந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேரை, அந்த விமான நிலைய ஊழியர் அல்ஃபோன்ஸ் யூலா மீட்டு, அனைவரின் பாராட்டிற்கும் ஆளாகியுள்ளார்.
அந்த விமான நிலையத்திலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும் பயணிகளின் பேக்கேஜ் மற்றும் அந்த விமானங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யூலா, குண்டு வெடிக்கும் பொழுது, நுழைவு வாயிலின் அருகே இருந்தார். காயமடைந்த 7 பேரை, சம்பவ இடத்திலிருந்து அகற்றி, மருத்துவ உதவி பெறுவதற்கு அவர் உதவினார்.
பி.பி.சி -யின் ஐரோப்பிய செய்தியாளர் கேவின் லீ "குண்டு வெடிப்பின் போது யூலா பயணிகளின் உடமைகளை கட்டிக் கொண்டிருந்தார், பிறகு 7 பேரை காப்பாற்ற உதவினார்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"உயிரற்று பலர் கீழே கிடந்ததை பார்த்தேன், கை கால்களை இழந்து நகரவும் முடியாமல் இருந்ததையும் பார்த்தேன். படுகாயமடைந்த 7 பேர்களை மட்டுமின்றி 5 உயிரற்ற  சடலங்களையும் அப்புறப்படுத்தினேன்" என்று யூலா கேவின் லீயிடம் கூறியுள்ளார்.
பயணிகளின் ரத்தத்தோடு, விமான நிலையத்தின் டைல்ஸ்களும் சிதறிக் கிடக்கும் வீடியோக்களும் படங்களும் பரவிக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

ad

ad