புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

நடுவானில் திடீர் கோளாறு: சுவிஸ் மீது 70 டன் எரிபொருளை கொட்டிய பிரான்ஸ் விமானம்

நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ற்பட்ட காரணத்தால் விபத்தை தவிர்க்க சுவிட்சர்லாந்து நாடு மீது 70 டன் எடையுள்ள எரிபொருளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Corsair என்ற பயணிகள் விமானம் நேற்று சுவிட்சர்லாந்து நாட்டில் தேவையான அளவிற்கு எரிபொருளை நிரப்பியுள்ளது.
பின்னர், பயணிகளை ஏற்றிக்கொண்ட அந்த விமானம் மொரீசியஸ் தீவுக்கு புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
விபத்தினை தவிர்க்க விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேசமயம், விமானம் தரையிறங்கும்போது தேவையான அளவில் மட்டுமே விமானத்தின் எடை இருக்க வேண்டும். ஆனால், சுவிஸில் எரிபொருளை நிரப்பியுள்ளதால் தேவைக்கு அதிகமாக எடை இருப்பதுடன் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விமானத்தின் எடையை குறைப்பதற்காக நடுவானில் பறந்தபோது எரிபொருளை கொட்ட விமானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுவிஸின் ஜூரா பகுதிக்கு மேல் பறந்தபோது சுமார் 70 டன் எடையுள்ள எரிபொருளை கீழே கொட்டியுள்ளது.
பின்னர், எந்தவித ஆபத்தும் இன்றி விமானம் பாதுகாப்பாக பாரீஸில் தரையிறங்கியுள்ளது.
நடுவானில் விமானம் பறக்கும்போது எரிபொருளை கீழே கொட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விமானிகள் பின்பற்ற வேண்டும்.
ஏனெனில், பறக்கும்போது விமானத்திலிருந்து எரிபொருளை கொட்டினால் விமானத்திற்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அவசர காலங்களில் மட்டுமே சில விதிமுறைகளை பின்பற்றி இதனை மேற்கொள்ள வேண்டும் என்பது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையின் உத்தரவாகும்.
அதேசமயம், வானத்திலிருந்து எரிபொருளை கொட்டுவதால், அது பூமியை வந்து அடைவதற்குள் ஆவியாகி விடும் என்பதால் பூமிக்கும் மனிதர்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad