புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2016

87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்; மேலும் 86 பேர் விடுவிக்கப்படலாம்


சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை  பாகிஸ்தான் கடற்படை  அடிக்கடி கைது செய்து வருகிறது. அதேபோல், வழிதவறி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிடும் இந்தியர்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் இந்தியர்கள் அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். 

அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள லாந்தி சிறையில் வாடிய இந்தியர்கள் 87 பேரை பாகிஸ்தான் நேற்று விடுவித்தது. இவர்களது ஆவணங்களை சரிபார்த்த பின்னர் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானின் எல்லைப்பாதுகாப்பு படையினர் 87 பேரையும் ஒப்படைத்தனர்.  வரும் மார்ச் 20 ஆம் தேதி மேலும் 86 மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ad

ad