புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

பொது எதிரணிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகின்றார் மைத்திரி!

கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இவ்வாரம் கூடவுள்ளது.
சந்திப்புக்குரிய திகதி தீர்மானிக்கப்படவில்லை. எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் மத்திய குழுக் கூட்டம் நடைபெறும்'' என்று சு.கவின் உப தலைவர்களுள் ஒருவரான திலங்க சுமதிபால தெரிவித்தார்.
அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த 17ம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பொது எதிரணியினர் கூட்டமொன்றை நடத்தினர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுமார் 36 வரையான எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என சு.கவின் பொதுச்செயலாளர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாது மஹிந்த சார்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் களமிறங்கினர்.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் போசகரான சந்திரிகா அம்மையாரும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனினும், சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, இந்த விவகாரம் பற்றி ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.
எதிரணியின் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கட்சியின் மத்திய குழுதான் முடிவெடுத்திருந்தது. ஆகவே, அந்த முடிவுக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி கட்சியின் மத்திய குழுதான் தீர்மானிக்கும் என்று சு.கவின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ad

ad