புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

பாகிஸ்தான் இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
 
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தர்மசாலாவில் வருகிற 19–ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இமாச்சலபிரதேச முதல்–மந்திரியும் போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்று முதலில் கூறியிருந்தார். இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவியது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய 2 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு இந்தியா வந்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆபரேட்டிங் பொதுமேலாளரும், போட்டி இயக்குனருமான ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் எம்.கே.சிங்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘இந்தியா–பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி தர்மசாலாவில் நடைபெறும். இந்த போட்டிக்கான பாதுகாப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அளிக்கும்’ என்று தெரிவித்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் பேசுகையில், ”பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி, இந்தியாவிற்கு வந்துஉள்ள பாகிஸ்தான் குழு அளிக்கும் தகவலை கொண்டு நாளை(இன்று) முடிவு எடுப்பதாக தெரிவித்து உள்ளார்,” என்று குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியை இன்று மதியம் லாகூரில் இருந்து புதுடெல்லிக்கு அனுப்புவதாக திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களும் உறுதி செய்து உள்ளனர். 

“19-ம் தேதி நடைபெற உள்ள போட்டியை தர்மசாலாவில் இருந்து கொல்கத்தா அல்லது மொகாலி மைதானத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டு உள்ளது,” என்றும் ஷகார்யார் தெரிவித்து உள்ளார். மொகாலி மாற்று மைதானமாக இருக்க முடியாது, கொல்கத்தா அல்லது புதுடெல்லிக்கு மாற்றலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோர்ட்டு உத்தரவுகள் காரணமாக போட்டியை டெல்லியில் நடத்தவும் பிரச்சனை உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தர்மசாலாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவந்த பாகிஸ்தான் குழுவானது மூன்று பிரச்சனைகளை பாகிஸ்தான் உள்துறையிடம் முன்வைத்து உள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ad

ad