செவ்வாய், மார்ச் 15, 2016

சிக்சரில் ஆரம்பித்து அடங்கிய நியூஸிலாந்து! பந்துவீச்சில் கெத்துகாட்டும் இந்தியா!


டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில்
நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தமட்டில் ஆசியக் கோப்பை ஃபைனலில் ஆடிய அணியே இதிலும் தொடர்கிறது.  நியூஸிலாந்து அணியில் போல்ட் மற்றும் சவுத்தி இடம்பிடிக்கவில்லை.
முதல் பந்தை சிக்ஸரோடு துவங்கிய நியூஸிலாந்து அடுத்த பந்திலேயே கப்தில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை குவித்துள்ளது.  இந்திய தரப்பில் அஸ்வின், நெஹ்ரா, ரெய்னா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம். ஆனால் இந்தியா ஒருமுறை கூட நியூசிலாந்தை,  ஐ.சி.சி போட்டிகளில் வீழ்த்தியதில்லை. முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்ற போதிலும்,  அதில் இந்தியா தோன்ற ஒரே ஆட்டம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டுமே.

அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியும்,  பேட்டிங், பந்துவீச்சு என சமபலம் கொண்ட  நியூஸிலாந்து அணியும்  தனது டி20 உலகக் கோப்பையை வெற்றியோடு துவங்க போராடும் என்பதில் சந்தேகமிருக்காது.ஆட்டத்தின் துவக்கத்தில் நியூஸி