புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2016

சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது?

தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்று  அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தே.மு.தி.க.வையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, வலுவாக தேர்தல் களத்தில் நிற்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கவும் முயற்சி நடந்து வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி, மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். 

முதல் சந்திப்பிலேயே ‘கிரீன் சிக்னல்’ கிடைத்துவிடும் என்று நம்பிவந்த பிரகாஷ் ஜவடேகருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. பிடி கொடுக்காமல் பேசிய விஜயகாந்த் பல நிபந்தனைகளையும் விதித்ததால், தங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்தில் சென்று தெரிவிப்பதாக கூறி பிரகாஷ் ஜவடேகர் டெல்லி புறப்பட்டு சென்றார். 

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அதை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக 150; காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று  பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார். ஆனால் அவரை விஜயகாந்த்ச் சந்திக்கவில்லை அவர் ரிஷிவந்தியம் செல்கிறார் என கூறபட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் - பிரகாஷ் ஜவடேகர் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்.

மீனம்பாக்கம் அருகே தேமுதிக பிரமுகர் இல்லத்தில் விஜயகாந்தை ஜவடேகர் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் பா.ஜ.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்றால், வலுவான கூட்டணியை முதலில் உருவாக்குங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று, பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வாருங்கள். மேலும், தேர்தல் செலவையும் ஏற்றுக்கொள்வதுடன், மைத்துனர் எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தரவேண்டும்’’ என்றும் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் நேற்று திருக்கோவிலூரில் நடந்த விழாவில் பேசிய விஜயகாந்த்,

பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவன் விஜயகாந்த் அல்ல. நான் பார்க்காத புகழ் அல்ல. பணம் அல்ல. நான் இதுவரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன். கூட்டணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் தெளிவாக, தைரியமாக இருக்கிறேன். யாருடனும் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. காசையும் வாங்க வில்லை.

தேர்தல் தேதி அறிவித்ததும் என் தொண்டர்களையும், பத்திரிகை நண்பர்களையும் அழைத்துத்தான் கூட்டணி பற்றி சொல்வேன். எதைச்சொன்னாலும் உங்களை அழைத்து, உங்கள் முன்னால்தான் சொல்வேன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் முன்னால் சொல்கிறேன் என கூறினார்.

இதை தொடர்ந்து தே.மு.தி.க வரும் சட்டசபை தேர்தலில் தனித்து நின்றுதேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்கும் விஜயகாந்த் இவ்வாறு முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது?

ad

ad