புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்

சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்
ஒன்றில் சிறிலங்கா அமைச்சரின் ஏமாற்றும் கூற்றினை மறுதலித்து அவரை மடக்கியுள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரா, வாசிங்டனில் உள்ள பிரபல மையமான U SIP என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் சிறிலங்காவில் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினை தீவிரமாக அகற்றுவதாகவும், தமிழர் காணிகளை துரிதமாக தமிழர்களிடம் கையளித்து வருவாதாகவும் கூறினார். இக்கருத்துக்கு சவால் விட்ட சான் சுந்தரம், எவ்வளவு இராணுவத்தினை தமிழர் பகுதிகளில் இருந்து அகற்றி உள்ளீர்கள் என்று கேள்வி தொடுத்தார். இதனால் திக்குமுக்காடிப்போன அமைச்சர், 37 சதவிகிதமான இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து விட்டார். இந்த பொய்யைக் கேட்ட கூட்டத்தினர் பலர் ஏழனமாகச் சிரித்தார்கள்.
இதே கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர பேசும்போது, சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை தான் சந்தித்ததாகவும், அவர்கள் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். சிறிலங்கா அமைச்சரை இரகசியமாக சந்தித்த அமைப்புக்கள் டக்லஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களும் மற்றும் USTPAC என்ற அமைப்பை அங்கத்தவர்களும் ஆவர். மேலும் சான் சுந்தரம் ஏன் நீங்கள் போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியும் ஏன் இன்று வரை தமிழர் காணிகளை முழுமையாக திருப்பி கையளிக்கவில்லை என்றும், தமிழர் காணிகளில் கட்டப்பட்ட உல்லாச விடுதிகள், Hotel ஆகியவற்றினையும் கையளிப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். இக்கேள்வியால் சங்கடப்பட்ட அமைச்சர், தமிழர்களின் முழுக்காணிகளையும் Hotel களையும் தான் நாடு திரும்பியதும், நடவடிக்கை எடுத்து உடனடியாக கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.

ad

ad