புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பி திடீர் விடுதலை!

மிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த முறைகேடுகளுள் ஒன்று, மதுரை கிரானைட் வழக்கு. இந்த வழக்கில் இருந்து முக்கிய
குற்றவாளியான பி.ஆர்.பி விடுவிக்கப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

கடந்த வாரம் இந்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி மீது புகார் எழுந்தது. கிரானைட் வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக மகேந்திரபூபதி செயல்படுகிறார் எனச் சொல்லி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மகேந்திரபூபதிக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டது. மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைத்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மகேந்திரபூபதி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பி.யை இன்று விடுதலை செய்திருக்கிறார்.

ad

ad