புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி என்பதில் எனக்கு கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. தேர்தலை கருத்தில் கொண்டு தே.மு.தி.க. தனியாக போட்டியிடுவது என்பது அவர்களது கட்சியின் நிலைப்பாடு. இது பற்றி முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, ஆட்சி செய்து கொண்டு இருக்கிற 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திராவிடம் இல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும். திராவிடம் இல்லாத அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் சேர வேண்டும் என்பது எனது கருத்து

கேள்வி: தே.மு.தி.க. கூட்டணிக்கு பா.ஜ.க. செல்லுமா?

பதில்: அது பற்றி எதுவும் சொல்லமுடியாது.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?

பதில்: தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

ad

ad