புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

பஞ்சர் ஆனதா பாண்டவர் அணி?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் சென்னையில் பொதுக்குழு நடந்த போது
பாண்டவர் அணியில் உள்ளவர்களிடையே பனிப்போர் ஏற்பட்டது. இதனால் அந்த அணியின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டவர் அணி உடைய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுக்குழுவில் என்ன பிரச்னை நடந்தது என்று விசாரித்தோம். "பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளில் துணைத்தலைவர் பொன்வண்ணன் முழுமுயற்சியில் ஈடுபட்டார். பொதுக்குழுவில் தொழிலதிபர் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது சிலருக்குப் பிடிக்கவில்லை. இதற்கு அவர்கள் பொன்வண்ணனிடம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனால் பொன்வண்ணன், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பொன்வண்ணனை சமாதானப்படுத்தியுள்ளனர். இருப்பினும் பனிப்போர் தீவிரமடைந்துள்ளதால் விரைவில் பாண்டவர் அணி உடைய வாய்ப்புள்ளது" என்றனர்.
ரித்தீஷின் நண்பரும் அதிமுக நடிகருமான விஜய்கார்த்திக், "பாண்டவர் அணியை வெற்றி பெற ரித்தீஷின் பங்கு அதிகம். பெருந்தன்மையாக அவர், தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று சொன்னார். பொதுக்குழுவின் மேடையில் அமர ரித்தீஷுக்கு குழுவினர் அழைப்பு விடுக்கவில்லை மரியாதைக் குறைவான இந்த நடவடிக்கை குறித்து பொன்வண்ணனிடம் சிலர் கேள்வி கேட்டதே பிளவுக்கு முக்கியக் காரணம். அதிமுகவை சேர்ந்த எங்களை புறக்கணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வரும் ஏப்ரல் 22-ம் தேதி டப்பிங் ஆர்டிஸ்ட் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ராதாரவியும், துணைத் தலைவர் பதவிக்கு நானும் போட்டியிட இருக்கிறோம். ராதாரவிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம்" என்றார்.
இதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசரிடம் கேட்டதற்கு, "அப்படியா...யார் விலகியதாக செய்தி வந்தது?' என்றவரிடம், விஷயத்தை சொன்னதும்,’’அப்படியெல்லாம் எதுவும் இல்லை..இது யாரோ கிளப்பிய வதந்தி தான்.’’ என்றார்.
பிறகு, பொன்வண்ணனிடம் பேசினோம். "நான் ஹைதராபாத்ல ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலையில இருக்குறேன்.இந்த நேரத்துல நாங்க எல்லாரும் வேலையைத் தான் பாத்துட்டு இருக்கோம். யார் இப்படி கிளப்பிவிட்டாங்கனு நீங்கதான் கண்டுபிடிக்கணும்’’ என்று பதில் அளித்தார்.
இது குறித்து துணைத்தலைவர் கருணாஸிடம் பேசினோம்."தனியா நாலு பேருக்கு சொல்றது வேற ..பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்குறது வேற. ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்குற பொறுப்பு தலைவருக்கு மட்டும் தான் உள்ளது. நீங்க அவர்கிட்டயே கேட்கலாம். ஒரு நடிகனா என்கிட்ட பேட்டி கேட்டால் நான் பேசுறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.
நெருப்பில்லாமல் புகையாது!

ad

ad