திங்கள், மார்ச் 28, 2016

களத்தில் தனித்து இறங்காமல் கூட்டணியாக இறங்கும் நடிகர் பார்த்திபன்


திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தொருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார் நடிகர் பார்த்திபன்.

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 

செய்திதாள்களில் நிறைய செய்திகள் இருக்கும் அதில் சில செய்திகள் சிலரை பாதிக்கும். என்னையும், லதா ரஜினிகாந்தையும் தெருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்த செய்தி மிகவும் பாதித்தது. இதில் கொஞ்சம் அவசர நடவடிக்கையாக கவனம் செலுத்துமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம். 

இந்த இடத்தில் தனித்து போட்டியிடமால் கூட்டணியாக போட்டியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். பார்த்திபன் மனிதநேய மன்றம், லதா ரஜினிகாந்தின் தயா ஃபவுண்டேஷன், எக்ஸ்‌நோரா நிர்மல் மற்றும் இன்னும் பல என்‌ஜி‌ஓ-கள் இணைந்து இதற்கான ஒரு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று இணைந்து இருக்கிறோம்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், முன்பே இதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். காவல் துறைக்கும் & மாநகர காவல்துறை ஆணையருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம் “அம்மா குழந்தைகள் நல காப்பகம்” என்று தொடங்கலாம் என்று கேட்டு இருக்கிறோம் என்றார்.