புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2016

கடவுளின் சக்தியை நிரூபிக்க இப்படி செய்யலாமா? கிறித்துவருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

கடவுளின் அபார சக்தியை நிரூபிக்க முயன்ற கிறித்துவ மதபோதகர் ஒருவரை சிங்கங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறித்துவ மதபோதகரான Alec Ndiwane என்பவர் தன்னுடைய சீடர்களுடன் தென் ஆப்பிரிகா நாட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா சென்றுள்ளார்.
வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Kruger National Park என்ற விலங்குகள் பூங்காவிற்கு இவர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
அப்போது, சீடர்களிடையே ‘கடவுளின் சக்தியை எப்படி உணர முடியும்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை சீடர்களுக்கு எளிதாக விளக்கும் நோக்கில் ஒரு விபரீதமான செயலில் அந்த மதபோதகர் ஈடுப்பட்டுள்ளார்.
அதாவது, ’சிங்கங்கள் பசியோடு உள்ள நேரத்தில் அதன் கூண்டுக்குள் சென்று கடவுளின் பெயரில் பிரார்த்தனை செய்வதன் மூலம் சிங்கங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இந்த அரிய நிகழ்வால் கடவுள் எவ்வளவு சக்தி படைத்தவர் என்பதை நீங்களே நேரடியாக உணர முடியும்’ எனக் கூறிய அந்த மதபோதகர் அமைதியாக அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனையில் ஈடுப்பட்டுள்ளர்.
பின்னர், திடீரென எழுந்த அவர் சிங்கங்கள் கூடியிருந்த பூங்காவிற்குள் நுழைந்துள்ளார். சிங்கங்களை நோக்கி கருணை பார்வையோடு நடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், பசியோட இருந்த சிங்கங்கள் தங்களுக்கு இரை கிடைத்துவிட்டது என எண்ணி மதபோதகரை நோக்கி பாய்ந்து வந்துள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத மதபோதகர் சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்து நின்றுள்ளார். பின்னர், சிங்கங்கள் பாய்ந்து வருவதை கட்டுப்படுத்த முடியாது என எண்ணிய அவர் உடனடியாக திரும்பி தனது காரை நோக்கி ஓடியுள்ளார்.
ஆனால், துரத்தி வந்த சிங்கங்களில் ஒன்று அவர் மீது பாய்ந்து அவரது பின்புறத்தை கடித்து குதறியுள்ளது.
சீடர்களின் அலறல் சத்தம் கேட்ட பூங்கா கண்காணிப்பாளர் உடனடியாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்ட சிங்கங்கள் அஞ்சி மதபோதகரை விட்டுவிட்டு அங்கிருந்து விலகி சென்றுள்ளது.
மதபோதகரை மீட்ட சீடர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
‘நான் பிரார்த்தனையை சரியாக செய்யவில்லை என நினைக்கின்றேன்.
அதேசமயம், இந்த உலகில் உள்ள விலங்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் நமக்கு வழங்கப்படவில்லை என்பதை தான் கடவுள் இந்த நிகழ்வு மூலம் உணர்த்தியிருக்கிறார்’ என மதபோதகர் தனது சீடர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

ad

ad