புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2016

இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்: மனம் கசியும் முன்னாள் போராளி


இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது Tamiwinஅம்மம்மாவுடன் வாழ்ந்து வரும் கந்தசாமி கவிதா தனது நிலை தொடர்பாக தெரிவித்தார்
எனது அப்பா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், அதனைத் தொடர்ந்து எனது அம்மப்பா காணாமல் போனார், எனது மாமா இயக்கத்தில் போராளியாக இருந்து வீரச்சாவு அடைந்தவர்.
இதன் காரணமாக இராணுவத்தின் நெருக்கடி அதிகரித்தது. இதனால் நானும் இயக்கத்திற்கு போக வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இவ்வாறு அவர் மேலும் தனது நிலைமையை கூறத் தொடங்கினார்.
நான் 2009ம் ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வரும் போது செல் அடிபட்டு முள்ளந்தண்டும் எனது காலும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வெளியேறினேன்.
பின்னர் மகிந்த அரசாங்கத்தில் புனர்வாழ்வு பெற்று 2010.10.15ம் திகதி எனது சொந்த ஊரான திருக்கோயில், விநாயகபுரத்தில் எனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றேன்.
மிகவும் கஸ்ரமான சூழ்நிலையிலேயே எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது அவ்வாறு இருக்கும் போதும் பின்வரும் ஆவணங்களின் கொப்பிகளை கேட்பார்கள்.
எனது அடையாள அட்டை போட்டோக் கொப்பி, பிறப்பத்தாட்சி பத்திரத்தின் போட்டோக் கொப்பி, எனது புகைப்படம், புனர்வாழ்வு பெற்றுவந்த புனர்வாழ்வு அட்டையின் போட்டோக் கொப்பி என்பனவற்றை புலனாய்வாளர்கள் கேட்பார்கள். என்னிடம் இவை அனைத்தையும் எடுத்துக் கொடுப்பதற்கு பணம் இல்லை.
நான் வளர்க்கும் கோழி போடும் முட்டையை வைத்தே எனது காலத்தை ஓட்டுகின்றேன்.
இவ்வாறு கஸ்டத்தின் மத்தியில் வாழும் நான் வெளியில் செல்லும் போது புலனாய்வாளர்கள் எனது பெயர் சொல்லி அழைப்பார்கள்.
அதுமாத்திரமல்ல ஒரு சில புலனாய்வாளர்கள் தன்னுடன் வருபவர்களிடம் என்னைக் காட்டி இவர் புனர்வாழ்வு பெற்று வந்தவர் என்று அடையாளம் காட்டுவார்கள்.
புனர்வாழ்வு பெற்று வந்து இதுவரைக்கும் அரசாங்கத்தினால் 20,000ஆயிரம் ரூபா காசும், ஒரு தையல் இயந்திரமும் சமுர்த்தியும் தந்தார்கள்.
அதைத்தவிர வேறு எந்த உதவிகளையும் யாரும் இதுவரைக்கும் செய்து தரவில்லை. எங்களது நிலைமை தொடர்பாக பலரிடம் முறையிட்டும் இதுவரைக்கும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.
என்னைப் போன்று புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர் பல பேர் இருக்கின்றார்கள் அதே போன்று கணவன்மார்கள், காணாமல் போனோரும் அதிகம் இருக்கின்றார்கள்
இவர்கள்  அனைவரதும் நலன் கருதி அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ, எங்களது புலம்பெயர்ந்த உறவுகளோ சரி இதனை கருத்தில் எடுத்து எங்களது வாழ்க்கைத் தரத்தினை கொண்டு நடத்துவதற்கு வாழ்வாதார உதவிகளையோ, சாதாரணமான ஒரு வீடு கட்டுவதற்கான உதவிகளையோ செய்து தந்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன் என்றார்.
தொடர்பு வங்கி இலக்கம் 224-2-002-1-0038764

ad

ad