புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?


ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
மனித உரிமை ஆணையம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், வட, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல், வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் ஆகிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் விதித்துள்ளது.
இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணமாகவே மனித உரிமை ஆணையத்தின் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு எதிர்வரும் ஜுன் மாதமளவில் விசேட நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்கள் எதிர்வரும் 2017ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட மாட்டாது என்றும் சிங்கள ஊடகத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்பையின் 31வது கூட்டத் தொடர் பெப்29 திங்களன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ளது. ஒன்பது நாடுகள் 2016ம் ஆண்டின் இவ்முதற் கூட்டத் தொடரில் இருந்து புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ளன.
அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த தனது பயணம் தொடர்பில் அமர்வின் முதன்நாள் தொடக்கவுரையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் அவர்கள் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
கடந்தாண்டு சிறிலங்கா தொடர்பில் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து, வரும் மாதக் கூட்டத் தொடரிலேயே ஆணையாளர் அவர்கள் வாய்மொழியாக சபைக்கு தெரிவிக்க வேண்டுமென அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத் தொடரில் சிறிலங்காவைத் தவிர்த்திருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தினை மையப்படுத்தி *The Sri Lanka Monitoring  and Accountability Panel (“MAP”) *சிறிலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப்பொறியமைவுகளை சுதந்திரமாக கண்காணித்து வரும் அனைத்துலக அவதானிப்பு குழுவின் செயற்பாடுகள் இக்கூட்டத் தொடரில் முதன்மைப்படுத்தப்பட்டு;ள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு அமைந்துள்ளது.
இக்கூட்டத் தொடரில் இந்த நிபுணர் குழு சிறிலங்காவை மையப்படுத்தி உப மாநாடொன்றினையும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சுதன்ராஜ், மேலும் 7 உப மாநாடுகள் சிறிலங்காவை மையப்படுத்தி இடம்பெறுவதற்கு பல்வேறு அமைப்புக்களினாலும் நிரல்படுத்தப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தீர்மானத்தின் வாயிலாக கிடைத்த 18 மாதங்களை, தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முனைவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், அதனை அனைத்துலக அரங்கில் தமிழர்கள் தீவிரமாக அம்பலப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் சுதன்ராஜ் மேலும் தெரிவித்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட  the Sri Lanka Monitoring  and Accountability Panel (“MAP”)  குழுவில், சர்வதேசக் குற்றவியல் சட்டம், மனித உரிமைகள், தேசிய போர்க்குற்ற நீதிமன்றங்கள், பிராந்தியக் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில் சட்டபூர்வ நிபுணத்துவம் பெற்ற மரீ கிராட் (பிரான்ஸ்), பீட்டர் ஹெயின்ஸ் க்யூசி (பிரித்தானியா) , ரிச்சாரட் ஜே.ரோஜர்ஸ் (பிரித்தானியா), ஹெதர்
றையன் (ஐக்கிய அமெரிக்கா), நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா (இந்தியா) இவர்கள் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad