திங்கள், மார்ச் 28, 2016

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்!

வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவே
செய்வார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புலிகளின் தனி ஈழத்திற்கான கருத்தை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாது. தனிநாட்டுக்கான கோரிக்கையை செயலிழக்கச் செய்ய வேண்டுமாயின் இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அரசு என்ற அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்னுரிமையை வழங்கியிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின் சமகால நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய விசேட விளக்கத்தின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி எச்சரிக்கை!தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்! ஜனாதிபதி எச்சரிக்கை!