புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

தனித்து ஆட்சியமைக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி


ஐக்கிய தேசியக் கட்சி இன்றி தனித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இரண்டு அணியினர், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் பலர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
ஹைட்பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தை தொடர்ந்து தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான கோரிக்கை சுதந்திரக் கட்சிக்குள் வலுத்து வருவதாக கூறப்படுகிறது

ad

ad