புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வைகோ பேட்டி




மக்கள் நலக்கூட்டணியைக் கண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-


கலக்கம்

மக்கள் நலக்கூட்டணி 4 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளது. வருகிற 29, 30-ந் தேதிகளில் தென்மண்டலத்தில் 5-வது கட்ட பிரசாரத்தை தொடங்க இருக்கிறது.

இதுவரை நான், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கோடிக்கணக்கானோரை சந்தித்துவிட்டோம். தற்போது நடக்க கூடிய ஆட்சியை போல தமிழகத்தில் ஊழல் மலிந்த ஆட்சி நடந்த சரித்திரம் இல்லை. ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளாலும், நில அபகரிப்பு புகார்களாலும் 2011-ல் தி.மு.க. தூக்கி எறியப்பட்டது. தற்போதும் அதே மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். எனவே எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணினோம். அதன்படி ஏற்றுக்கொண்டு உள்ளனர். இரண்டு அணிகளிடத்திலும் கலக்கம் இருக்கிறது.

ஆட்சிக்கு வருவோம்

5 மாவட்ட காவிரிநீர் ஆதாரத்தை அடியோடு நாசமாக்குகிற மீத்தேன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது தி.மு.க. அரசு. இந்த திட்டத்திற்கு முதல் கண்டனம் தெரிவித்தவன் முல்லைப்பெரியாறை காக்க 8 ஆண்டுகள் போராடி இருக்கிறேன். இதற்காக போராடியவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதா அரசு. தி.மு.க. எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளை, தாதுமணல், கிரானைட் கொள்ளை சர்வசாதாரணமாகி விட்டது. இந்த உண்மையையெல்லாம் வெளிக்கொண்டு வந்த சகாயத்தை ஐ.ஏ.எஸ். நிர்வாகத்தில் திறமையற்றவர் என்று, அவருடைய எதிர்கால வாழ்வில் உரிய இடம் கிடைக்காமல் போகும் வகையில் அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இது மன்னிக்க முடியாதது.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். சகாயம் போன்ற உன்னதமான, நேர்மையான அதிகாரிகள் தமிழகத்திலேயே நிரம்ப இருக்கிறார்கள். காவல்துறையிலேயும் இருக்கிறார்கள். அவர்களை அரசு எந்திரத்தில் பயன்படுத்தி ஊழல் இல்லாத, மது இல்லாத, நேர்மையான ஆட்சியை மக்கள் நலக்கூட்டணி தரும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கூட்டணிக்கு தே.மு.தி.க. வருமா?

கேள்வி:- தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வருமா?

பதில்:- நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பு அப்படியே இருக்கிறது. அவர்கள் மறுத்து நாங்கள் கூட்டணிக்கு வரவாய்ப்பில்லை என அறிவிக்கவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

கேள்வி:- தனித்து போட்டியிடுவோம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளாரே?

பதில்:- அவர் அறிவித்ததுமே பிரேமலதா, கூட்டணியில் சேர்பவர்கள் வரலாம் என தெரிவித்து உள்ளார். எனவே அவர் தி.மு.க., அ.தி.மு.க. வேண்டாம் என தெரிவித்து உள்ளார். அது தான் தகவல். அப்படி வைத்துக்கொள்வோமே.

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கும், மக்கள் நலக்கூட்டணிக்கும் தான் போட்டி என ஏற்கனவே கூறியிருந்தீர்கள். இந்த நிலையில் மற்ற கட்சிகளிடையே ஏற்பட்ட பயம் காரணமாக தான் உங்கள் கூட்டணியை உடைக்க சலசலப்பை ஏற்படுத்துகிறார்களோ?

பதில்:- எங்கள் கூட்டணியை கண்டு அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, கலைஞரின் கூடாரத்துக்கே பயம்வந்துவிட்டது. கலைஞர் சருக்கவே மாட்டார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆனால் அவரையே ‘மிஸ் லீடு’ பண்ணி கவுத்துட்டாங்களே தி.மு.க.வினர்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ad

ad