புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ஏழு பேரின் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்,மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தங்களின் விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றையும்  தாக்கல் செய்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த ஏழு பேரும் 24 ஆண்டுகளாக சிறையில் தமது வாழ்நாளை கழித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஏழு பேரின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செயவதற்கு தமிழக அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
எனவே, ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கம் கருத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad