புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2016

யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை


நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யோசித ராஜபக்ஸ உட்பட நால்வருக்கும், ஒரு லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், பத்து லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
மேலும் நீதிமன்ற உத்தரவின்றி இவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
இவர்களில் நிசாந்த ரனதுங்கவிற்கு பிணை வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர் தனது பிணைமனுவை தனியாக தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது நிசாந்த ரனதுங்கவின் மனைவியும் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad