செவ்வாய், மார்ச் 15, 2016

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை


நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என ஆசிரியை கோதை தெரிவித்துள்ளார்.

தென்காசி அருகே கடந்தாண்டு மாயமானதாக தேடப்பட்டு வந்த மாணவனையும் ஆசிரியையும் திருப்பூரில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை கடையநல்லூர் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ஆசிரியை கோதைலட்சுமி பொலிஸாரிடம் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆசிரியை மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம்.

ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருமணத்திற்கு பின்பு தான் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம்.

இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம்.

பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியை கோதைலட்சுமி மற்றும் மாணவன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதையடுத்து அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, அவர்களை 15 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்திலுள்ள மகளிர் சிறையிலும் மாணவன் நெல்லை கூர்நோக்கு இல்லத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.