புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2016

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்


 
நடிகர் கலாபவன் மணி (வயது 45), மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.  இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த மருத்துவமனையில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. 

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார். 

ad

ad