புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

இன்று ஏன் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்?

விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது  உலககோப்பை டி20. உலககோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் முதல் போட்டியிலேயே  தோல்வியை தழுவியிருக்கிறது, நியூசிலாந்து செம மாஸ் ஃபார்மில் இருக்கிறது. இங்கிலாந்து சாதனை சேஸ் செய்கிறது, அதிரடி கெயில், சிக்ஸர் மன்னன் அஃப்ரிடி ஆகியோர் கலக்க    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்  ஆகிய அணிகள் நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன
. சூப்பர் 10 சுற்றில் அனைத்து அணிகளும் ஒரு போட்டியாவது விளையாடி முடித்துவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தோல்வியடைந்த  அதிர்ச்சியில் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை சந்திப்பது ஏகத்துக்கும் ஃபீவர் ஏற்றியிருக்கிறது.


இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆசிய கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி மல்லுக்கட்டின, கடைசியில் விராட் கோலி உதவியால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை உலககோப்பையில்  இந்திய அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதே கிடையாது என்பது வரலாறு. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதே இல்லை என்பது வரலாறு. இப்படி முரண்பட்ட சூழ்நிலையில் தான் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இன்று காலை முதல் மழை  பெய்து வருவதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவும் இருக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 

ஏன் முக்கியம்? 

நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்திய அணி. சூப்பர் 10 க்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளில் மிக மிக மோசமான ரன்ரேட்டுடன் பின் தங்கியிருப்பது இந்திய அணி மட்டுமே. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் தோல்வியடைந்திருந்தாலும் ரன் ரேட் பெரிய அளவில் சரியவில்லை என்பதால் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு விளையாடினால் போதுமானது. ஆனால் இந்தியாவுக்கு வெற்றியுடன் ரன் ரேட்டும் தேவை. இந்தியா இடம்பெற்றிருக்கும் பிரிவில் ஏற்கனவே   இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி சிறந்த ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது நியூசிலாந்து. இந்தியா இப்போதைக்கு அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட மற்ற அணிகளை சார்ந்தே இருக்கிறது. நியூசிலாந்து அனைத்து போட்டிகளையும் வென்று, இந்தியா மீதி இருக்கும் மூன்றும் போட்டிகளையும் வென்றால், இந்தியாவும்,  நியூசிலாந்தும் அரையிறுதிக்கு சென்று விடும்.


மாறாக நியூசிலாந்து இனி ஏதாவதொரு போட்டியில் தோல்வி அடைந்தாலோ, இந்தியா ஏதாவது ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலோ இந்திய அணிக்கு  சிக்கல் தான். பாகிஸ்தான் ஏற்கனவே  +2.750 என நல்ல ரன்ரேட்டில் இருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய, வங்கதேச அணியை வென்றாலும் கூட அரையிறுதிக்கு செல்வது கடினமாகி விடும். எனவே இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அவசியம். 

ரன் ரேட் முக்கியமா? 


இப்போதைக்கு இந்தியாவுக்கு வெற்றி தான் முக்கியம். பாகிஸ்தானுடன் எப்படியாவது வெற்றி பெற்றுவிட்டால் போதும், அதன் பின்னர் வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுடன் நடக்கும் போட்டிகளில் ரன் ரேட் குறித்து கவலைப்பட்டு கொள்ளலாம். எனவே இன்றைய தினம் எக்கச்சக்க டென்ஷன் தேவையில்லை ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தியா விளையாடுவது  அவசியம். 

ad

ad