புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

ஆத்திரமடைந்த முதல்வர் ஜெயலலிதா,


பரோலில் நளினியை ஒருநாளாவது விடமுடியும் என்றால் ஏன் அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய முடியாது மாநில அரசு என்ன
கிள்ளுக் கீரையா.
தமிழக அரசு அதன் வேலையைச் செய்யும் அதில் தமிழக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை
இதில் எத்தனை சுயலக் காரர்கள் உள்ளே நுழைந்து தங்களது கையாலாகாத் தனமான அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பவில்லை.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான விடயம் மூடி மறைக்கப் பட்ட ஓன்று அல்ல அது உலகளாவிய ரீதியில் பிரபலமானது இது முழுக்க முழுக்க மத்திய அரசின் பிடிக்குள் இருந்தது இப்போது அது தமிழக அரசின் கைகளுக்கு வலுச் சேர்த்துள்ளது அதனால் தமிழக அரசு தனக்குள்ள.
நீதி நியாயாதிக்கத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய சட்டசபை அனுமதியுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பரிந்துரை செய்தது.
இது அரசின் கடமை ஆனால் சுயலாபம் அனுபவிக்கும் தமிழக அரசியல் கட்சிகள் சில இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி தேவையற்ற சில நடை முறையால் அவர்களின் விடுதலைக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளனர். என்பது கேள்விக்குறியாக உள்ளது வேதனை தருகிறது.
இவர்களின் விடுதலை நீதியின் முன் உள்ள விடயம்
இவர்களின் விடுதலையை எதிர்க்கும் சுயலாப அரசியல் கட்சி சார்ந்தவர்கள் ஒருவாரால் இவர்களின் விடுதலை வேண்டி குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகள் இன்று வரை மேல் நீதிமன்றம். உயர் நீதிமன்றம் என ஒரு விடுதலை மனு கொடுக்க முடியவில்லை.
இவர்கள் எப்படி அவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பது.
இதுதான் இன்றைய தமிழக அரசின் உண்மையான நிலை.
தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஏன்,
சில தினங்களுக்கு முன் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில், நளினிக்கு 3 நாள் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தமிழக அரசு தரப்பில் 7 பேரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுவது நாடகமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், நளினி உள்ளிட்டவர்களுக்கு நன்னடத்தையின் அடிப்படையிலேயே விடுதலை வழங்க சிறைத்துறை அதிகாரி பரிந்துரைத்து.
அதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பரோல் உள்ளிட்ட சலுகைகளை அனுபவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட கைதி இயல்பான வெளியுலக வாழ்க்கையை அனுபவிப்பதாக கருதப்பட்டு விடுதலைக்கு எதிராக அமைந்து விடும் என்பதாலேயே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நளினி பரோலில் இருக்கும்பொழுது அவருக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அதற்கான முழு பழியும் தமிழக அரசு மீதே விழும்.
நளினிக்கு எதிரானவர்களால் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் பரோலுக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நளினிக்கு மீண்டும் பரோல்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ள ஒருநாள் பரோலில் வெளியே வர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நளினியின் தந்தை கடந்த மாதம் 23ம் திகதி மரணமடைந்த போது நளினி 24ம் திகதி, 12 மணி நேர பரோலில் வெளியேவந்து, இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தந்தை ஈமக்காரியங்களுக்காக நளினி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் கடந்த 2ம் திகதி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அதன் மீது சிறைத்துறை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பரோல் அனுமதி கேட்டு நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் போது நளினிக்கு முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே பரோல் தரப்பட வேண்டும். எனவே இப்போது பரோல் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
ஆனால், 16வது நாள் ஈமச்சடங்கில் மகள் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும், என்று நளினி சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நளினி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாலா, அவருக்கு ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
எனவே இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணிவரை நளினிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ad

ad