புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

பழைய ஐபோன்களில் இருந்து 1,000 கிலோ தங்கத்தை உருக்கி எடுத்த அப்பிள் நிறுவனம்

உலகம் முழுவதும் பழைய அப்பிள் செல்போன்களில் இருந்து சுமார் 1,000 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அப்பிள் நிறுவனம்
உருக்கி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் நிறுவன தயாரிப்புகளான அப்பிள் செல்போன்கள்(iPhones), ஐபேட்(iPads) மற்றும் மேக்ஸ்(Macs) போன்றவைகள் விற்பனை செய்யப்பட்ட பிறகு பழையதாக ஆன பிறகு அல்லது அவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால், இந்த தயாரிப்புகள் அமெரிக்காவில் உள்ள Cupertino என்ற நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்படும்.
இவ்வாறு அனுப்பப்படும் இந்த சாதனங்கள் மறுசுழற்சிக்கு(Recycling) அனுப்பப்பட்டு அதில் சேர்க்கப்பட்டுள்ள தங்கத்தை உருக்கி எடுக்கப்படும்.
பொதுவாக, அப்பிள் சாதனங்களில் சிறிய அளவில் தங்கம் சேர்க்கப்பட்டு தான் தயாரிக்கப்படும். இவற்றில் ஏதாவது குறைபாடுகள் அல்லது தேவையில்லாமல் திருப்பி கொடுக்கப்பட்டால், அதில் உள்ள தங்கத்திற்கு பணம் திருப்பி கொடுக்கப்படும்.
இப்படி அப்பிள் நிறுவனங்களுக்கு கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ள தயாரிப்புகளிலிருந்து சுமார் 1,000க்கும் அதிகமான எடையுள்ள தங்கம் உருக்கி எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு 28 மில்லியன் பவுண்ட்(5,77,05,09,360 இலங்கை ரூபாய்) ஆகும்.தங்கம் மட்டுமின்றி, திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து 10.4 மில்லியன் கிலோ எடையுள்ள இரும்பு, 2 மில்லியன் கிலோ எடையுள்ள அலுமினியம், 1.4 மில்லியன் கிலோ எடையுள்ள செப்பு, 3,000 கிலோ எடையுள்ள வெள்ளி ஆகிய உலோகங்களும் தனி தனியாக பிரித்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad