புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

திமுக 111.அதிமுக107 நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு




அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவிமற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய  கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும், அதன் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் சரியலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.  10000 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றதாக  நியூஸ்  நேஷன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை  கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து 107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு கூறுயுள்ளது.

முதல்வர் வேட்பாளர் :
முதலமைச்சர் வேட்பாளர்களில் 
ஜெயலலிதா- 30 சதவிகிதம், 
கலைஞர் - 29 சதவிகிதம் 
ஸ்டாலின் - 08 சதவிகிதம் 
விஜயகாந்த் -  13 சதவிகிதம் 
வைகோ-  01 சதவிகிதம் 
சிதம்பரம் - 04சதவிகிதம்  என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாக்கு சதவிகிதம்:

அதிமுக - 30%
திமுக   - 33%
தேமுதிக- ம.ந.கூ. - 22%
பாஜக - 02%
இதர  - 06%

ad

ad