புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்

11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம்
கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்
நேஷன் பிராந்தியத்தில் ஒரே நாளில் 11 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததையடுத்து அங்கு அவரச நிலைமை பிரடகனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலைமை பிரகடனத்தையடுத்து நெருக்கடி நிலைமையை கையாளும் குழு குறித்த பிராந்தியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பழங்குடியினர் வாழும் அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷன் பிராந்தியத்தில், கடந்த மாதம் மட்டும் 28 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த செம்டெம்பர் மாதத்தில் இருந்து 100 ற்கும் அதிகமானவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் பழங்குடியின மக்கள் கடுமையான வறுமையில் வாடுவதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதே போன்று கடந்த மாதமும் 28 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த போது அவரச நிலைமை பிரடகனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.dath ca
- See more at: http://www.canadamirror.com/canada/60646.html#sthash.zppYGYk4.dpuf

ad

ad