புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2016

நிலாவரை கிணற்றில் குதித்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் 152 அடி ஆழத்திலிருந்துசடலமாக மீட்பு

nilavarai
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (24.04.16)
கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.
75 வயதுடைய சரவணமுத்து தேவதாசன் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (23.04.16) பிற்பகல், நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
சனிக்கிழமை (23) இரவு வரை அவரை இனங்காணாத நிலையில், திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் காங்கேசன்துறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
சுழியோடிகள், நீர்மூழ்கி வீரர்கள் என இரு பிரிவுகளாக தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், குறித்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நவீன ஜீ.பீ.எஸ் கருவிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சடலம் நீரின் 152 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, வீரர்களால் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad