புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2016

180 தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் இன்று திமுக தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு குறித்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கலைஞரைசந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, எத்தனைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு, 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது. 

குலாம் நபி ஆசாத் சொன்னதுபோல, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறக்கூடிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை விரட்டியடிப்பதற்கு, அந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு, நிச்சயமாக திமுக தலைமையில் அமைந்திருக்கக் கூடிய இந்த கூட்டணி அதனைச் சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப இருக்கிறது. 

ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், இன்று மாலையில் இருந்து திமுக பேச்சுவார்த்தை குழுவும், காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவும் இன்று மாலை கூடி எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தைத் தொடங்கப்படவுள்ளது என்றார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகள்
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி
விவசாய தொழிலாளர் கட்சிக்கு ஒரு தொகுதி
சமூக சமத்துவ படை கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 180 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

ad

ad