புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2016

வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் 
முதலமைச்சர்  முன்மொழிந்த வரைபின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
01. இந்தியாவில் மாநிலங்கள் மொழிரீதியாக பிரிக்கப்பட்டிருப்பதைபோல இலங்கையானது அடிப்படையில் இரு பரந்த நிலங்களாக அதாவது, பெரும்பான்மையாக தமிழ்பேசும் பிரதேசங்களை கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் பிரதேசத்தை கொண்ட மற்றைய 7 மாகாணங்கள் மற்றொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தல் வேண்டும்.
02. இவ்விரு பரந்த மொழிரீதியான மாநிலங்களிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையக தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
03. சிங்களம் பேசுவோரை கொண்ட மாநிலம் ஆனது அதனுள் பிரிக்கப்படல் வேண்டுமா? என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
04. பெருநகருக்குரிய கொழும்பு பிரதேசமானது தனியானதோர் நிர்வாகத்தை கொண்டு நாட்டின் தலைநகர் அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
05. மேலே தொடர்ச்சியாக இந்த ஆவணத்தில் ஒப்பிக்கப்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான பின்புலம் மற்றும் 1833ம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் சமூகத்தால் நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வந்த தனித்துவ தன்மையின் அடிப்படையில்,
எந்த வொரு சமூகத்தை சேர்ந்த மக்களும் மற்றய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவதோ அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களாக இருக்கும் வகையில் அவர்களை சார்ந்திருக்கவோ வேண்டியதில்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஒற்றையாட்சி முறைக்குரிய அரசாங்கத்திற்கு பதிலாக கூட்டாட்சி சமஸ்டி ஆட்சி முறைக்குரிய அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டியது அத்தியாவசியமாகின்றது.
இலங்கை பிரஜை ஒருவரும் சட்டரீதியாக இன்n னாருவருக்கு கீழானோர் என அவனோ, அவளோ உணர்வதற்குரிய வழிமுறையை இல்லாதொழிப்பது உறுதிசெய்யப்பட வேண்டியது அத்தியாவசியமாகும்.
வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சமூக சட்டரீதியாக ஏனை யோரிடமிருந்து தமக்கென்று அளவு மீறிய பயனை கோரக்கூடாது.
06. இலங்கையில் தமிழ் பேசுவோரை கொண்டுள்ள வடகிழக்கு பிரதேசங்களினுள் தற்போதைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைதலின்போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது உருவாகும்.
இத்தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை, பரிமாண மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
மொழிரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநில பாராளுமன்றத்தை கொண்டிருக்கும்.
07. மலையக தமிழர்களுக்காக அதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழி ரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
08. அதிகாரம் ஆனது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தை தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையிலும் சமமாக பகிரப்படுதலை முழு நாட்டினதும் பாராளுமன்ற பிரதிநிதிகள் உறுதிப்படுத்தல் வேண்டும்.
09. எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சி பிராந் தியம் மற்றும் மலையக தன்னாட்சி பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஸ்டி பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ, அல்லது தன்னாட்சி பிராந்தியத்தாலோ அங்கீகரிக்கப்படாத வரையில் நடைமுறைக்கு வரக்கூடாது.
10. வடகிழக்கு மாநில பாராளுமன்றம், வடகிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோ ல் மாலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்ள தக்க வகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இப்பாராளுமன்றத்துக்கும் பிராந்திய சபைகளுக்கும் போதிய சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
இலங்கையை விட பரப்பளவிலும், குடிப்பரம்பலிலும் சிறிய நாடாகிய சுவிஸ்லாந்தில் நடைமுறையில் கன்டோன் நாட்டு பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் இங்கு சுவிகாரம் செய்யப்படுவதற்காக பரிசீலிக்கப்பட முடியும்.
தமிழ் பேசும் மாநில அரசியல் மத்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் நிறைவேற்றும் அதிகாரம் எவற்றையும் கொண்டிருக்கப்படமாட்டார். அவை மாநிலத்தின் அமைச்சரவையினாலேயே தன்னுடமையாக்கப்படும்.
11. இலங்கையின் அரச கரும மொழிகள் சிங்களம் மற்றும் தமிழ் ஆவதுடன் இலங்கையானது ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள சகல பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
மலையக தமிழ் பிராந்திய சபை தவிர்ந்த தீவின் மீதி பாகத்தில் பேணப்படும் சகல பதிவுகளும், மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும்.
மலையக பிராந்திய சபைகளில் பேணப்படும் சக ல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளும் தமிழிலில் அல்லது சிங்களத்தில் நடைபெறலாம். அவற்றின் தமிழ் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பும் ஆங்கில மொழி பெயர்ப்பும் பேணப்படல் வேண்டும்.
12. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இல்லாதிருக்க வேண்டும்.
உப பிரிவு
அவ்வாறான நடவடிக்கைகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது.
1. 1979ம் ஆண்டு நிறுவப்பட்ட மகாவலி அதிகார சபை போன்ற அரசியல் மற்றும் நிர்வாக அதிகார சபைகளின் தொடர்ச்சியானது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு மாகாணசபையினால் அங்கீகரிக்கப்படாத, மாகாண எல்லைகளை மீறிய புகலிட நடவடிக்கைகளை மேம்படுத்த அனுமதித்துள்ளது.
2. 1992ம் ஆண்டும் 58ம் இலக்க அங்கீகாரங்களை மாற்றியமைக்கும் (பிரதேச செ யலாளர்கள்) சட்டமானது அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும் மாகாண நிர்வாகத்தின் நோக்கு எல்லைக்கு அப்பாற்படுத்தி அதன் மூலமாக ஒரு இரட்டை நிர்வாக ஒழுங்கமைப்பினை தோற்றுவித்துள்ளது.
3. மத்திக்கும் அயலுக்குமிடையே ஒருங்கியல்பான நியாயாதிக்கத்தை ஒழுங்கு செய் வதன் மூலமாக மாகாண நிர்வாகத்தை வலிதற்றதாக்கி மத்தியானது அதிகாரம் செலுத்தியது.
இதன் பின்னர் ஒருங்கியைபான நியாயாதிக்கமானது தோற்றுவிக் கப்படக்கூடாது. மாநில மற்றும் சமஸ்டி கூட்டாற்சிக்குரியதாக மாத்திரம் அதிகார ங்கள் பகிரப்பட வேண்டும்.
13. ஒவ்வொரு மாநில அரசாங்கத்தினதும் சுயாட்சி, கூட்டாட்சி, சமஸ்டி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
14. சகல பிரஜைகளுக்கிடையிலும் அவர்களுடைய மொழி, மதம், சாதி கோட்பாடு அல்லது பிரதேசம் எவ்வாறாயினும் சமத்துவ கொள்கையானது வலியுறுத்தப்படுவதுடன் அரசியல், நிர்வாக, கல்வி, பொருளாதார மற்றும் தொழில் அடங்கலான ஏனைய சகல துறைகளிலும் சகல சமூகங்களுக்கும் மதிப்பளிப்பு ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும்.
அரச சேவையிலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுத்தாபனங்களிலும் சகல பிரஜைகளுக்கும் தொழில்வாய்ப்புக்கு சமவாய்ப்பு உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
15. ஒவ்வொரு மாணவரும் தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியிலும் தேர்ச்சி பெற்றிருப்பதை கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப் பட வேண்டும்.
16. குடியரசின் கொடியானது மக்கள் பிரிவுகளை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை இல்லாதொழிக்க வேண்டும். தேசிய கீதமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையில் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ அல்லது இரு மொழிகளிலுமோ பாடப்படுதல் வேண்டும்.
17. தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை புத்தகங்கள் ஊடான நிலைபேறான நிகழ்ச்சி நிரலானது இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.
இலங்கையின் வரலாறானது பிரிவுசார் அல்லது வட்டாரம் சார் கோரிக்கைகளுக்கு பணிந்திராது, சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக சரியாக வரையப்படுதல் வேண்டும்.
18. மாநில எல்லைகளுக்குட்பட்ட அரச நிலங்கள் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கும் நோக்கு எல்லைக்கு கீழாக வருதல் வேண்டும்.
அந்நிலம் அப்பிரிவில் உள்ள மக்களின் நன்மைக்காக பயன்படுத்தப்படவுள்ளபோது அரசாங்கத்தின் சம்மதம் அல்லது இசைவு இன்றி அந்நிலத்தை எந்த அதிகாரத்தையும் பிரயோகிக்க முடியாது.
19. மாநில அரசாங்கத்திற்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். சமஸ்டி கூட்டரசுக்குரிய பொலிஸானது மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் ஒழுங்கமைக்கப்படுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
20. தீவிரவாத தடுப்பு ( தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
21. புதிய அரசியலமைப்பு ஒழுங்குகள் இன, மத, மொழி, கோட்பாடு, சாதி மற்றும் பண்பாட்டை சார்ந்திராது சகல சமூகங்களுக்கிடையிலும் சமூக அக்கறையை உறுதி செய்து தனிப்பட்ட பிரஜைகள் சட்டவிதிகளுக்கும் உரிமைகளுக்கும், சுய உரிமைகளுக்கும் மதிப்பளித்தலை மேம்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தின் நேரான இலட்சியங்களை தொடர வழிசமைக்கப்படல் வேண்டும்.
22. நவீன கண்காணிப்பு முறையின் காரணமாக போர் முடிவுற்றமையை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ படைகளை கண்காணிப்பு பணிக்காக நிலைநிறுத்த வேண்டிய அவசியப்படானது தேவைக்கு மிகையானது.
முன்னாள் போராளிகளை பொ து வாழ்க்கையினுள் மீள கொண்டுவருவதன் பொருட்டு படைக்குறைப்பு, படைக்கலைப்பு மற்றும் மீள ஒருங்கமைத்தல் செய்முறையானத செய்யப்பட வேண்டும்.
23. அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக பணிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சமூகத்தினரை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள அரசியலமைப்பு சபை, அதன் பக்கச்சார்பான பிரதிநிதிகள் தொகையை மனதில் வைத்து தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நிலைத்திருக்க தக்கதுமான ஒரு தீர்வை உறுதி செய்வதன் பொருட்டு,
தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழிடமாக உள்ள பிரதேசங்களில் அவர்களின் தனி த்துவ தன்மைக்கு ஏற்றவகையில் அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக அரசாங்கத்திற்கும் தமிழ் தலமைத்துவங்களுக்குமிடையில் ஒரு ஆரம்ப இணக்கப்பாடானது எய்தப்படுதல் வேண்டும்.
இந்த இணக்கப்பாட்டில் தமிழ் தலைவர்கள் தம் மக்கள் சார்பாக கூறும் விடயங்கள் ஒருதலைப்பட்சமாக பெரும்பான்மை சிங்களம் பேசும் உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டால் தமிழ்பேசும் மக்கள் தம் வாழ்விடங்களில் மக்கள் தீர்ப்பை பெற்று தமது அரசியல் நிலையை உறுதி செய்ய குறிப்பிட்டிருத்தல் வேண்டும். அவ்வாறானதோர் இணக்கப்படானது ஐ.நா மற்றும் ஏனைய நட்பு நாடுகளால் காப்பீடு செய்யப்படல் வேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad