புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது
. தலைநகர் குயிட்டோவில் இருந்து 173 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆகி பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தால், பல்வேறு இடங்களில் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஈக்வடார் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் ரஃபேல் கொரியா தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ad

ad