புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

டெல்லியில் நேதாஜி நினைவகம் கட்டப்படும்: மேலும் 25 ரகசிய ஆவணங்கள் வெளியிட்டு மத்திய அரசு தகவல்

மறைந்த சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இன்று மேலும் 25 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் தலா 5 ஆவணங்கள் இதுவரை பிரதமர் அலுவலகத்திலும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இருந்தவை ஆகும். 15 ஆவணங்கள் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் வசம் இருந்தவை.

இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்ட பின்னர், மத்திய கலாசார துறை மந்திரி மகேஷ் சர்மா கூறியதாவது:

நேதாஜியை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு டெல்லியில் மிகப்பெரிய நினைவிடம் ஒன்றை விரைவில் அமைக்கும். தற்போது ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் உள்ள நேதாஜியின் அஸ்தி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். 

தீயில் முழுமையாக எரிந்து கருகிய உடல்கள் மற்றும் அஸ்தியில் இருந்து மரபணு சோதனை நடத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இதில் ஏதேனும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ள முடியுமா? என்பதை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad