எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 45 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 72 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்படுகிறது. அந்த பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.