புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

சுவிஸ் விமான நிலையத்தில்3 மாதங்களில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் தான் கடந்த 3 மாதங்களில் இந்த போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
6 தபால் பெட்டிகளில் வந்த போதை பொருட்களில், 158 கிலோ எடையுள்ள கேத், 15 கிலோ எடையுள்ள கொக்கைன் உள்பட 175 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதை பொருட்கள் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களில் கொண்டுவரப்பட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரேசில், அல்பேனியா, லிதுயானியா, ஹங்கேரி மற்றும் சுவிஸ் நாடுகளை சேர்ந்த 24 முதல் 56 வயதுடைய நபர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீது போதை மருந்துக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றங்களுக்காக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ad

ad