புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு! 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு


பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
பீகாரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை நடத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.
எனவே அதே போல் தற்போது பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் இதற்காக புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி மது விலக்கை மீறினாலோ, கள்ளச் சாராயம் காய்ச்சினாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மது விலக்கை முழுமையாக அமல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் மதுபானங்கள் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் உள்ள நகர்ப் பகுதிகளில் மட்டும் 656 கடைகளில் வெளிநாட்டு மதுபானம் தொடர்ந்து விற்கப்படும்.
அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த மதுக் கடைகளும் மூடப்படும் என்று நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
மது விலக்கு காரணமாக பீகார் மாநில அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், அந்த வருவாய் வேறு வழிகளில் சரி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து மதுபான வகைகளை பீகாருக்குள் கடத்தி வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மது விலக்கை முன்னிட்டு கடைசி நாளான நேற்று பீகார் மாநிலம் முழுவதும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
நேற்று ஒரே இடத்தில் மீதமான 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டுள்ளன.

ad

ad