புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?

சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட
பகுதியில் வசித்து வருபவள் நான். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையின்போது மாநகர மேயர் சைதை துரைசாமி முதல்வர் ஜெயலலிதாவின் புகழை வரிக்கு வரி புகழ்ந்து படித்தார். இதற்கு அவையில் பலத்த கைத்தட்டல் நிகழ்ந்து கொண்டிருந்தது.
இந்த கைத்தட்டல் சப்தத்தில் கடந்த காலத்தில் தி.மு.க.வின் கைகளில் மாநகராட்சி இருந்தபோது அவர்கள் செய்த ஊழலின் பெருந்தொகையை மேயர் வாசித்தது மற்றவர்களின் செவிகளுக்கு சென்று சேரவில்லை என்றே தோன்றியது. மாநகராட்சி மேயரின் உரை தொடர்பான கையேட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தபோது அந்த உறுத்தல் தெரிந்தது.

அந்த கையேட்டில் இருந்த வரிகள் அப்படியே!

"தணிக்கைத்துறையை முந்தைய நிர்வாகம் தங்கள் இயலாத வசதிக்காக அதை சரியான முறையில் செயல்படுத்தாமல் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தணிக்கைத்துறையை செயல்படாத துறையாக மாற்றி மாநகராட்சிக்கு ரூபாய் 5 ஆயிரத்து 86 கோடியே 56 லட்சம் இழப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். இப்போது மாநகராட்சி இழப்பு ஏற்படாமல் தணிக்கைத் துறை சுட்டிக்காட்டிய தணிக்கைத் தடைக்கு காரணமான அலுவலர்கள் மீது பணியில் இருந்து ஓய்வு பெறும் முன்பே நடவடிக்கை எடுத்ததினால் பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்வதற்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.


முந்தைய ஆட்சியாளர்களால் தணிக்கைத் தடை நீக்கம் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதில் உள்ள தாமதம் களையப்பட்டு இதுவரை 5295 தணிக்கைத் தடைகள் ரூ.401.11 கோடி மதிப்பிலானது பல்வேறு ஆக்கப்பூர்வமான துரித நடவடிக்கைகளால் நிலுவையில் உள்ள தணிக்கைத் தடை நீக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது. நாளது தேதி (26-02-2016)இல் 4685.45 கோடி மதிப்பிலான 26129 தணிக்கைத் தடைப்பத்திகள் நிலுவையில் உள்ளது. இத்தணிக்கைத் தடை நிலுவைப் பத்திகளை வெகுவாகக் குறைத்திட ஏதுவாக மாதந்தோறும் கூட்டமர்வுகள் மற்றும் மறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தணிக்கைத் தடை நிலுவை ஏதும் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவர சீரிய தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க. மாநகராட்சியில் நான்காயிரம் கோடி ரூபாய்களுக்கான முறையான கணக்குகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது அவர்கள் இந்தப் பணத்தை கையாடல் செய்திருக்கலாம் அல்லது ஊழல் செய்திருக்கலாம் என்பதான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பிரச்னைக்குரிய இந்த விஷயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து முந்தைய ஆட்சியாளர்களின் ஊழலை எடுத்துச் சொல்லி அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய மேயரோ அதனைக் வெறுமனே வாசித்துவிட்டு கடந்து சென்றிருக்கிறார்.

இந்த செய்திகளை மக்கள் மன்றத்தில் பிரசுரிக்க வேண்டிய ஊடகங்களும் கண்டும் காணாமல் இருக்கின்றன. ஒருவேளை கடந்த தேர்தலில் அலைக்கற்றை ஊழல் தி.மு.க.வை அலைக்கழித்தது போல, மாநகர ஊழலும் இந்த தேர்தலில் தி.மு.க.வை அலைக்கழித்துவிடக்கூடாது என்று அ.தி.மு.க.வினரே கருதுகிறார்களோ என்னவோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

-சாராள்

ad

ad