புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

அரசு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ.800 கோடி சொத்து பறிமுதல்

 
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஒருவர் ரூ.800 கோடி சொத்துகளை குவித்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட போக்குவரத்துத் துறை உதவி ஆணையராக இருப்பவர் ஏ.மோகன். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ந்துள்ளதாக ரகசிய புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரமாதேவி தலைமையில் மோகனுக்கு சொந்தமான வீடுகளில் ரெய்டு நடத்தினர். இவருக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் சொத்து இருப்பதாக தெரிய வந்தது. 3 இடங்களிலும் உள்ள சொத்துக்களை போலீசார் கணக்கெடுத்தனர். அவரது ஐதராபாத் வீட்டில் தங்கம், வைரம் , விலை மதிக்க முடியாத கற்கள் மற்றும் ரொக்கப்பணம் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ரெய்டு நடத்தி முடிக்க 2 நாட்கள் பிடித்தது. 

இதன் மொத்த மதிப்பு ரூ.800 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரி மோகனை கைது செய்து சிறயைில் அடைத்தனர்.

இன்னும் அவரது வங்கி லாக்கர்கள் பல திறக்கப்படவில்லை, அதனைத் திறக்கும் போது திடுக்கிடும் சொத்துக் குவிப்புகள் தெரியவரலாம் என்று ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கருதுகின்றனர். ஆவணங்களில் உள்ள முகவரிகளைக் கொண்டு இவர் நடத்தும் 8 நிறுவனங்களைத் தடம் காண முடியவில்லை என்கிறார் டி.எஸ்.பி ரமாதேவி. முதலில் ஊழல் தடுப்பு அதிகாரிகளை மோகன் தன் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதிகாரிகளைக் கண்டதும் தனது செல்போனை அவர் தூக்கி விட்டெறிந்துள்ளார். பிறகு அந்த செல்போனையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

ad

ad